அரசவல்லி சூரியநாராயண ஸ்வாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :705 days ago
விசாகப்பட்டினம்: அரசவல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற சூரியநாராயண ஸ்வாமி கோவிலில் நேற்று ரத சப்தமி விழா சிறப்பாக நடைபெற்றது. ரத சப்தமியை முன்னிட்டு, விசாக சாரதா பீடத்தின் தலைமை அர்ச்சகர் ஸ்வாத்மானந்தேந்திர சரஸ்வதி, சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதித்யநாம கோஷத்துடன் சூரிய நாராயண ஸ்வாமியை வழிபட்டனர்.