மாசி முதல் சோமவாரம்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
ADDED :956 days ago
கோவை; கோவை ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் மாசி மாதம் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.