சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :608 days ago
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் அம்பாத்துறை ரோடு தேவி கருமாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில், திருக்கல்யாணம் நடந்தது. பிப். 9ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில். பிப். 14ல், அம்மன் கரகம் பாலித்தல் நடந்தது. விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள், பிப். 16ல் பூக்குழி இறங்கினர். முக்கிய நிகழ்வாக, நேற்று ஆனந்தவள்ளி சமேத மகாலிங்கேஸ்வரர், திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக பரிவார தெய்வங்களான விநாயகர், தேவி கருமாரியம்மன், வாராஹி அம்மன், பெருமாள், ஐயப்பன் எழுந்தருளல் நடந்தது. விசேஷ யாகசாலை பூஜைகளை தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.