பழநி முருகன் கோயிலுக்கு வால்பாறை பக்தர்கள் பறவை காவடி
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர்.
பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நிறைவு பெற்ற பிறகும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்து வருகை புரிகின்றனர். இன்று (பிப்.22) கோவை மாவட்டம், வால்பாறையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். பழநி, சண்முக நதி அருகே ராட்சத கிரேனில் 9 நபர்கள், பறவைக்காவடியில் அந்தரத்தில் தொங்கியபடி வந்தனர். 15 அடி நீளமுள்ள அலகு குத்தி, கத்திகளால் அலகு குத்தினர். 10 பேர் அலகு குத்தி வந்தனர். பழநி மலைக்கோயில் கிரி வீதியில் வலம் வந்தனர். கடந்த 48 ஆண்டுகளாக பால்காவடி, தீர்த்த காவடி, மயில் காவடி எடுத்து வருகின்றனர். அலகு குத்தி வந்தவர்களிடம் பெண்கள் தங்கள் குழந்தையை கொடுத்து பெற்றனர். பழநி. நகரின் முக்கிய வீதிகளில் வந்து கிரிவலப் பாதையில் வலம் வந்தனர். மலைக் கோயிலில் தரிசனம் செய்து திரும்பினார்.