உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம்; குவிந்த பக்தர்கள்

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம்; குவிந்த பக்தர்கள்

விருத்தாசலம்: விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவ விழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம்,  கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்த அருள்பாலித்து வருகிறார். முக்கிய நிகழ்வாக, பிப்ரவரி 20ல் விபசித்து முனிவருக்கு சாமி காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேரில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தனர். 25ம் தேதி தெப்பல் உற்சவம், 26ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !