குடமூக்கே குடமூக்கே
ADDED :564 days ago
மாசிமகத்தின்போது மகாமகக் குளத்தில் நீராட முடியாத சூழல் வந்தால் கவலைப்பட வேண்டாம். அந்நாளில் நீங்கள் இருக்கும் இடத்திலேயே மகாமகக் குளத்தின் தீர்த்தத்தை வரவழைக்கலாம். எப்படி? அன்று ‘குடமூக்கு’ என வாயாரச் சொல்லுங்கள். சிறந்த பலன் கிடைக்கும் என்கிறார் திருநாவுக்கரசு நாயனார். ‘குடமூக்கே குடமூக்கே என்பீராகில்கொடுவினைகள் தீர்ந்தானைக் குறுகலாமே’அந்நாளில் அந்த அருளாளர் பாடிய திருத்தாண்டகத்தை பாராயணம் செய்யலாம். ஏவியிடர்க் கடலிடைப்பட்டு இளைக்கின் றேனை இப்பிறவி அறுத்தேற வாங்கி யாங்கேகூவிஅமர் உலகனைத்தும் உருவிப் போகக் குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க்கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்து எங்கூத்த னாரே