உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் மாசி மாத தீர்த்தவாரி

மயிலாடுதுறை பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் மாசி மாத தீர்த்தவாரி

மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர் சுவாமி எழுந்தருளி மாசி மாத தீர்த்தவாரி நடைபெற்றது- 15 ஆண்டுகளுக்குப் பிறகு  நடந்த நிகழ்ச்சியில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மாசி மகம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுயதாரனேஸ்வரர் கோவிலில் கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்திர விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 4ம் நாள் திருவிழாவான காவிரி  சங்கமத்தில்  வேதாரண்ய சுவாமி  அம்பாளுடன் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள், அஸ்தி தேவர் வீதியுலாவாக பூம்புகார் காவிரி சங்கமத்துறைக்கு எழுந்தருளினர். அங்கு அஸ்திர தேவருக்கு வாசனை திரவியபொடி, பால், தயிர், தேன் ,சர்க்கரை, மஞ்சள் பொடி, சந்தனம், பன்னீர் ஆகியவை உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அஸ்திரதேவர் கடலில் தீர்த்தம் கொடுக்க அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி அம்பாளை தரிசித்தனர். தொடர்ந்து சுவாமி அம்பாள்  அஸ்திர தேவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !