திருக்கோவிலூர் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா
ADDED :4763 days ago
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், பெருமாள் வாழை மரத்தில் அம்பு போடுதல் நடந்தது.திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவின் நிறைவாக கடந்த 24ம் தேதி மாலை அம்பு போடுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் கோவில்முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட வாழை மரத்தில், பெருமாள் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரியர் தலைமையில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதனையடுத்து ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது.