உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்

பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்

பழநி; பழநி முருகன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

பழநி கோயிலில் ஆண்டு தோறும் மாசிமகம் வழிபாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் வெள்ளி சங்கு, உற்பட 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, யாக குண்டத்தின் முன் கும்ப கலசங்களில் நீர் நிரப்பி யாகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. யாக பூஜையில் வைக்கப்பட்ட 1008 சங்கு மற்றும் கலசத்தில் உள்ள புனித நீரை உச்சிகால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மலைக்கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !