பாலகணேசர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4832 days ago
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மாரநாடு பாலகணேசர் கோயில் கும்பாபிஷேகம் (அக்.,28) காலை 10.05 மணிக்கு நடக்கிறது. கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் வழிபட்டுள்ளார். அவரால் வைக்கப்பட்ட வேல், சூட்டுக்கோல் 100 ஆண்டுகளாகியும் துருப்பிடிக்கவில்லை. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இதை வழிபடுகின்றனர். கொடுமலூர் நவநீதகிருஷ்ண குருக்கள்
கும்பாபிஷேக பூஜை நிகழ்த்துகிறார். (அக்.,27) மாலை 5 மணிமுதல் யாகசாலை பூஜை துவங்குகிறது. மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து காலை 6.50, 7.50 க்கு மாரநாடுக்கு பஸ் இயக்கப்படுகிறது