கேரளா சமாஜம் சார்பில் வித்யாரம்ப விழா
ADDED :4831 days ago
தர்மபுரி: விஜயதசமியையொட்டி, தர்மபுரி கேரளா சமாஜம் சார்பில், 11ம் ஆண்டு வித்யாரம்பம் விழா நடந்தது. கேரளா சமாஜ தலைவர் ராமன்குட்டி தலைமை வகித்தார். காலை, 9 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் பூஜை பகவதி சுவாமி நம்பூதிரி நாயர் குழுவினர் தலைமையில் நடந்தது. குழந்தைகளுக்கு நாவில் தங்க எழுத்தாணியால் மூலம் ஹரி ஸ்ரீ கணபதி நமஹா நாமம் அதனை தொடர்ந்து அரிசியில் குழந்தைகள் கையால் ஹரி ஸ்ரீ கணபதி நமஹா நாமம் என எழுதினர். துணைத்தலைவர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.