காளஹஸ்தீஸ்வரர் பிரம்மோத்ஸவத்திற்கு திருப்பதி தேவஸ்தான தலைவருக்கு அழைப்பு
ADDED :649 days ago
திருப்பதி; திருப்பதி, காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை பிரம்மோத்ஸவம் நடைபெற உள்ளது. பிரம்மோத்ஸவத்தில் கலந்து கொள்ளுமாறு காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி தேவஸ்தான ஆட்சி மன்றக் குழு தலைவர் சீனிவாசலு, அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர ரெட்டியிடம் அழைப்பு கடிதம் வழங்கினர். காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி வாரி தேவஸ்தான வேத பண்டிதர்கள் கருணாகர ரெட்டியை ஆசிர்வதித்தனர்.