காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மக தெப்போற்சவம்
ADDED :684 days ago
காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மக திருத்தேர விழாவில் கருட தீர்த்த தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா வந்து ரங்கநாதர் அருள்பாலித்தார்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் மாசிமகத் தேர்த் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும், வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மகத் தேர்த்திருவிழா, 17ம் தேதி கிராம சாந்தியும்,18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தேரோட்டம், பரிவேட்டை உற்சவம் நடந்தது. விழாவில் இன்று கருட தீர்த்த தெப்பக்குளத்தில் நடந்த தெப்போற்சவம் நடந்தது. முன்னதாக பெருமாள் காலை தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜை செய்த பின், அலங்காரம் செய்திருந்த, பரிசலில் தெப்போற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.