/
கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையானே உந்தன்.. அச்சுதம் கேசவம் பாடல் பாடிய ஜெர்மன் பாடகி; தாளம் போட்டு ரசித்த பிரதமர் மோடி
அண்ணாமலையானே உந்தன்.. அச்சுதம் கேசவம் பாடல் பாடிய ஜெர்மன் பாடகி; தாளம் போட்டு ரசித்த பிரதமர் மோடி
ADDED :666 days ago
பல்லடம்: பல்லடத்தில் ஜெர்மன் பாடகியின் பக்தி தமிழ் பாடலை கேட்டு தாளம் போட்டு ரசித்தார் பிரதமர் மோடி.
பல்லடம் வந்திருந்த பிரதமர் மோடியை, ஜெர்மனி பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினர். பாடகி கசாண்ட்ரா குறித்து ஏற்கனவே பிரதமர் தனது மான்கிபாத் ரேடியோ நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்திய மொழிகளில் ஆன்மிக பாடல்கள் பாடுவதை பாடகி கசாண்ட்ரா வழக்கமாக கொண்டுள்ளார். மோடியை சந்தித்த பாடகி கசாண்ட்ரா, அண்ணாமலையானே உந்தன் அன்பின் கலந்தோமே மற்றும் அச்சுதம் கேசவம் என்ற ஆன்மிக தமிழ் பாடல்களை பிரதமர் மோடி முன் பாடினார். பாடலை கேட்டு தாளம் போட்டுகொண்டே வெகுவாக ரசித்தார் பிரதமர்.