பழனியில் உலக முருக பக்தர்கள் மாநாடு
ADDED :693 days ago
பழனி; உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் ஒன்றுகூடி பல நிகழ்வுகளை மேற்கொள்ளவும், முருகனின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் உலக முருக பக்தர்கள் மாநாட்டை பழனியில் நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு எடுத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில், பழனியில் முருக பக்தர்கள் மாநாடு, நிதி வசதியில்லாத கோவில்கள் திருப்பணிக்கு நிதி, அர்ச்சகர்களுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.