மாசி சோமவாரம்; ஆபத்சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :920 days ago
கோவை; கோவை ராம்நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் மாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவிலில் உள்ள ஆபத்சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.