உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய கருணைபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் ஆண்டு விழா

பெரிய கருணைபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் ஆண்டு விழா

அவிநாசி; வட்டம்,வேலாயுதம்பாளையம் கிராமம், பெரிய கருணை பாளையத்தில் எழுந்தருளியுள்ள மஹா சக்தி மாரியம்மன் கோவிலில் 3ம் ஆண்டு விழாவில், 108 சங்கு பூஜை நடைபெற்றது. அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய கருணை பாளையத்தில் எழுந்தருளியுள்ள மஹா சக்தி மாரியம்மன் கோவில், 3ம் ஆண்டு விழாவில், விநாயகர் பூஜை, 108 சங்கு பூஜை, நவசக்தி வேள்வி, கலச அபிஷேகம், அலங்கார பூஜை ஆகியவையுடன் மஹா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !