உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார், மார்ச் 20- ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழாவின் நிறைவு நாளான இன்று தேரோட்டம் சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று காலை தேருக்கு எழுந்தருளிய பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 12:35 மணிக்கு தேர் வடம் பிடித்து இழக்கும் நிகழ்ச்சி துவங்கியது. திரளான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேரினை இழுத்தனர். ஒரு மணி நேரத்தில் கோயில் வீதிகளை சுற்றி வந்து, 12:41 மணிக்கு தேர் நிலையம் அடைந்தது. அப்போது பக்தர்கள் ஆராவாரம் செய்து அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை போட்டும், மாவிளக்குகள் எடுத்தும் நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை தரிசித்தனர். மாலை 5:30 மணிக்குமேல் யானை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளலும், மஞ்சள் நீராட்டும் நடந்தது. விழா ஏற்பாடுகளை தக்கார் சக்கரையம்மாள், செயல் அலுவலர் ஜோதிலட்சுமி, அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர். டி.எஸ். பி. பாலசுந்தரம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !