உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபுதாபி சுவாமி நாராயண் கோவிலில் குவியும் பக்தர்கள்

அபுதாபி சுவாமி நாராயண் கோவிலில் குவியும் பக்தர்கள்

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில் சமீபத்தில் திறக்கப்பட்ட, சுவாமி நாராயண் கோவிலில் நேற்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டனர். இதையடுத்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

அபுதாபி சுவாமி நாராயண் கோவில் வடஇந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரக்கதின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.  மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சுவாமி நாராயண் கோவிலில் நேற்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டனர். இதையடுத்து முதல் நாளிலேயே 65000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்றும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !