இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் ஸ்கந்தகிரி மலை
சிக்கபல்லாபூர் நகரில் இருந்து 3 கி.மீ., தொலைவில் 1,350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது பழமையான ஸ்கந்தகிரி மலை. சாகசம் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் விரும்பப்படும் இடமா கும். பெங்களூரு அருகில் உள்ள மலையேற்றத்துக்கு மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாகும். மலையேற்றம் ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான பகுதி. ஸ்கந்தகிரி மலை உச்சிக்கு செல்ல ஒரு நாள் வேண்டும். அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரைக்கும். இங்கு செல்வோர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். கல்வாரா கிராமத்தின் அடிவாரத்தில் அமைந்து உள்ள பாபாக்னி கோவிலில் இருந்து ஸ்கந்தகிரி மலைக்கு நடைபயணம் துவங்குகிறது. 1,350 மீட் டர் உயரத்தில் அமைந்து உள்ள கோட்டையின் கம்பீரமான காட்சியை, முழு நடைபாதை வழியாக பங்கேற்போரை பார்க்கலாம். உச்சியை அடைந்ததும், மலையேறுவோர் பழைய கோட்டையை பார்த்து மெய்சிலிர்க்கின்றனர். இது பாழடைந்த நிலையில் இருந்தாலும், அது கம்பீரமானதாக பிரதிபலிக்கிறது. உச்சியில் சிவன் கோவிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகாலை 4:00 மணி முதல் 8:00 மணிக்குள் மலையேற்றத்தை துவக்க வேண்டும். அப்போது இரண்டு மணி நேரத்தில் உச்சியை அடைய முடியும். காகையில் குடிநீர், தின் பண்டங்கள் எடுத்து சென்றுவிடுங்கள். இரவு நேரத்தில் டிரெக்கிங் செல்வதானால், டார்ச் லைட் எடுத்து செல்ல வேண்டும்.