மகா சிவராத்திரி; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :672 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் சன்னதியில் நடக்கும் லட்சார்ச்சனைக்காக, கோவில் வளாகத்தில் ஏராளமான வில்வம் மற்றும் பூக்களை பக்தர்கள் குவித்துள்ளனர். உலக நன்மைக்காக மகா சிவராத்திரி நாள் முழுவதும், கோவில் ராஜகோபுரம் முன், கிரிவலம் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை சங்கம் சார்பில், இன்னிசை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.