ஆதி வீரபத்திரர் சுவாமி கோயிலில் சிவராத்திரி பூஜை
ADDED :674 days ago
திருப்புல்லாணி; திருப்புல்லாணி மேற்கு ரத வீதியில் உள்ள ஆதி வீரபத்திரர் சுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் காலை 10 மணி அளவில் நடந்தது. மூலவர் ஆதிவீரபத்திரர் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டு, மா விளக்கு ஏற்றியும் வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டு குடிமக்கள் செய்திருந்தனர்.