உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி; மாட்டு வண்டி கட்டி குலதெய்வத்தை வழிபட வந்த பக்தர்கள்

மகா சிவராத்திரி; மாட்டு வண்டி கட்டி குலதெய்வத்தை வழிபட வந்த பக்தர்கள்

உசிலம்பட்டி; உசிலம்பட்டியைச் சேர்ந்த மக்கள் மகாசிவராத்திரி தினத்தை குலதெய்வ வழிபாடு தினமாக கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து குலதெய்வ கோயில்களுக்கு வந்து வழிபாடு நடத்தினர்.

உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள குலதெய்வ கோயில்களான கருமாத்தூர் மூணுசாமி, பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள குலதெய்வ கோயில்களுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்து வழிபாடு நடத்தினர். பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் வழிபாட்டுக்கு உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய உக்கிராண பெட்டிகளை இன்று காலை பூசாரிகள், கோடாங்கிகள், பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி எடுத்துச் சென்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து பக்தர்கள் மாட்டு வண்டியில் ஆதிவழக்கப்படி நாட்டாமங்கலம் ஆதிசிவன் கோயிலுக்கு வருகை தந்து மகாசிவராத்திரி மாசிப்பச்சை திருவிழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !