உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா சிவராத்திரி; இரவு முதல் அதிகாலை வரை நடைபெற்ற பூஜை

வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா சிவராத்திரி; இரவு முதல் அதிகாலை வரை நடைபெற்ற பூஜை

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா, நேற்று இரவு 7:30 மணி முதல் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இரவு 8:30 முதல் காலை 4:30 மணி வரை, நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. ஒவ்வொரு கால அபிஷேக வேளையில் ருத்ர பாராயணமும், அதைத் தொடர்ந்து பஜனையும் நடைபெற்றது. இரவு 7:30 மணிமுதல் பல்வேறு குழுவினரின் பக்தி பாடல்கள் கச்சேரி நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற வழிபாட்டில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹரிஹரன் ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !