உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயில் பிரம்மோற்சவ விழா; அதிகார நந்தி வாகனத்தில் உலா

காளஹஸ்தி சிவன் கோயில் பிரம்மோற்சவ விழா; அதிகார நந்தி வாகனத்தில் உலா

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் பதினோராவது நாள் காலை அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஷ்வரரும் காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்காரம் மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை ( ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்)சிறப்பு மலர்களாலும் தங்க ஆபரணங்களாலும் கோயில் அலங்கார குருக்கள் அலங்காரம் செய்ததோடு , வேத பண்டிதர்கள் கோயில் யாகச் சாலை அருகில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் மேள தாளங்களுடன் கோயிலில் இருந்து ஊர்வலமாக  கோயில் எதிரில் உள்ள நெப்பல மண்டபம் அருகில் வாகனங்களில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் பஞ்ச மூர்த்தி களுடன் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கோயில் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு கோயில் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உருவாக்கத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !