பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்; காத்திருந்து தரிசனம்
ADDED :724 days ago
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.
பழநி முருகன் கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகை உள்ளது. இன்று பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கிரிவீதி பகுதிகளில் வாகனங்கள் அனுமதி இல்லாததால், ஆக்கிரமிப்பு குறைவாக இருந்ததால் பக்தர்கள் எளிதாக கிரிவலம் வந்தனர். அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. வின்ச், ரோப்கார் மூலம் மலைக்கோயில் செல்லவும், சுவாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.