ஒச்சாண்டம்மன் ஆபரண பெட்டிகள் கோயில் திரும்பியது
ADDED :648 days ago
உசிலம்பட்டி; பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி வழிபாட்டுக்கு உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய உக்கிராண பெட்டிகள் மார்ச் 8 காலை பூசாரிகள், கோடாங்கிகள், பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி எடுத்துச் சென்றனர். வழிபாடுகளுக்கு மின் கோயிலில் இருந்து பெட்டிகள் ஆதி வழக்கப்படி எடுத்து வந்தனர். நேற்று மாலை வடகாட்டுப்பட்டியில் இருந்து ஏராளமான பக்தர்கள் புடைசூழ சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு எடுத்து வந்தனர். உசிலம்பட்டி நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் நீதிபதி மகாராஜன், டி.எஸ்.பி., விஜயக்குமார் மற்றும் போலீசார் வரவேற்பு கொடுத்தனர்.