திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறு தீ விபத்து
ADDED :597 days ago
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று முதல் துவங்கி உள்ளது. அதை முன்னிட்டு கோவில் கொடிமரம் முன்பு வெட்டிவேர் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 5.30 மணியளவில், உற்சவர் அம்பாளுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தி உள்ளனர். தீபத்தை உயர்த்திப் பிடித்த போது பந்தலில் அலங்கரித்து இருந்த வெட்டிவேரில் தீப்பற்றியது. தீ பரவியதில் நாகநாதன், குரு ஆகிய 2 குருக்கள் காயமடைந்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. பரிகார பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.