12 ஜோதிர் லிங்க தரிசனம் இன்று நிறைவு
ADDED :650 days ago
நாகர்கோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பிராஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் சார்பாக நடுவூர்கரை சிவசக்தி மண்டபத்தில் கடந்த 3ம் தேதி துவங் கிய 12 ஜோதிர்லிங்க தரி சனம் இன்று (12ம் தேதி) நிறைவடைகிறது. இன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடை பெறுகிறது. இதில், சித்தா, ஆயுர் வேதா,ஹோமியோ பதி, அலோபதி, நேச்சு ரோபதி என அனைத்து மருத்துவமும் முகாமில் இடம்பெறுகிறது. இதில், குலசேகரத்தில் ராமகிருஷ்ணா மருத்துவ கல்லூரி டாக் டர் நாகேந்திரன் கலந்து கொள்கிறார். நேற்று ஜோதிர் லிங்க தரிசனத்தில் மண்டைக்காடு பேரூராட்சி தலைவி ராணி ஜெயந்தி கலந்து கொண்டார். அவருக்கு இறை நினைவு பரிசு வழங்கப்பட்டது.