உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டவம் ஆடும் சிவன் சிலைகளின் புகைப்பட கண்காட்சி

தாண்டவம் ஆடும் சிவன் சிலைகளின் புகைப்பட கண்காட்சி

புதுச்சேரி; இந்தியா, கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள கோவில்களில் இருக்கும் தாண்டவம் ஆடும் சிவன் சிலைகள் புகைப்பட கண்காட்சி புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வுபள்ளியில் நடந்தது.

இந்தியா மற்றும் கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து உள்ள பிரசித்தி பெற்ற பழங்கால கோவில்களில் தாண்டவம் ஆடும் சிவன் சிலைகளின் புகைப்பட கண்காட்சி புதுச்சேரி தூய்மா வீதியில் உள்ள(இ.எப்.இ.ஓ.) பிரெஞ்சு தொலைக்கீழ்த்திசை ஆய்வுப் பள்ளியில் கடந்த மாதம் துவங்கியது. இதில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தமிழகம் கர்நாடகாவில் உள்ள கோவில்களில் ஊர்த்துவ, காலாரிமூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி உள்பட பல்வேறு நிலைகளில் தாண்டவம் ஆடும் சிவன் சிலைகளை 1956 ல் இருந்து புகைப்பட கலைஞர்கள் பட்டாபிராமன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அவரைத் தொடர்ந்து ஜெ.எல்.கார்டின் எடுத்த புகைப்படங்கள், அவரைத் தொடர்ந்து கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் எரிக் பூர்தோனோ மற்றும் அடையாளம் தெரியாத புகைப்படக்காரர் எடுத்த சிவன் சிலைகளின் அரிய புகைப்படங்களின் கண்காட்சி இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !