உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2000 ஆண்டுகள் பழமையான வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி; பக்தர்கள் பரவசம்

2000 ஆண்டுகள் பழமையான வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி; பக்தர்கள் பரவசம்

தஞ்சாவூர்; கருணா சுவாமி கோவிலில் சூரிய பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் அருகே கரந்தையில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கருணா சுவாமி கோவில் அமைந்துள்ளது. பெரியநாயகி உடனுறை வசிஷ்டேஸ்வராக காட்சியளிக்கிறார். சோழ மன்னனின் கருங்குஷ்டம் நோயை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது. பெரிய கோவில் கட்டுவதற்கு முன்பே பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி 3, 4, 5 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை வெகு விமர்சையாக நடக்கும். அதேபோல் பங்குனி மூன்றாம் தேதியான இன்று வசிஷ்டேஸ்வருக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு  மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சூரிய ஒளி லிங்கத்தின் மீது பட்டதும் வசிஷ்டேஸ்வருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !