உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி ஆதி பிரம்மோற்சவம்; அங்குரார்ப்பத்துடன் துவங்கியது

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி ஆதி பிரம்மோற்சவம்; அங்குரார்ப்பத்துடன் துவங்கியது

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும் ஆன திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் ஆதிபிரம்மோத்ஸவம் சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு பிரம்மோத்ஸவம் அங்குரார்ப்பத்துடன் துவங்கியது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர்த் திருவிழா பிரசித்திப் பெற்றது. அங்குரார்ப்பணம் என்பது ஒரு முக்கியமான அம்சம். நவ தானியங்களை ( நெல், கோதுமை, துவரை, பச்சை பயறு, கொண்டை கடலை,மொச்சை, எள்,உழுந்து, கொள்) , அவற்றை விதைப்பது தான் பாலிகை தெளித்தால் அல்லது அங்குரார்ப்பணம் எனப்படும். அங்குரம் என்றால் விடை அல்லது முளை என்று பொருள். அர்ப்பணம் என்றால் சமர்ப்பித்தல் என்று பொருள். ஸ்ரீரங்கத்தில் ஆதி பிரம்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த் திருவிழா அங்குரார்ப்பத்துடன் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !