வரசக்தி விநாயகர் கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :929 days ago
கோவை; கோவை ஆர். எஸ். புரம் உழவர் சந்தை அருகே உள்ள ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோவிலில் பங்குனி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவிலில் இருக்கும் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.