உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்

கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில், 19ம் ஆண்டு பிரம்மோத்ஸவ கொடியேற்று விழா இன்று நடந்தது.விழாவை ஒட்டி இன்று காலை, 10:30 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்று விழா நடந்தது. மாலை அன்ன வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாளை மாலை, 6:00 மணிக்கு சிம்ம வாகனம், 21ம் தேதி முத்து பந்தல், 22ம் தேதி அனுமந்த வாகனம், 23ம் தேதி கருட வாகனம், 24ம் தேதி திருக்கல்யாண உற்சவம், யானை வாகனம், 25ம் தேதி திருத்தேர் விழா, 26ம் தேதி குதிரை வாகனம், பரிவேட்டை, 27ம் தேதி சேஷ வாகனம் அன்று இரவு தெப்ப தேர் நடக்கிறது. 28ம் தேதி பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி, சாற்று முறை நடக்கிறது. விழாவை ஒட்டி இம்மாதம், 28ம் தேதி வரை தினமும் திவ்ய பிரபந்த சேவா காலம் மதியம், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கரி வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !