திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உடையவர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :537 days ago
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு உடையவர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தெய்வத் திருமணங்கள் நிகழ்ந்த சிறப்பு மிகுந்த நாள் பங்குனி உத்திரம். பரமசிவன், பார்வதியை பங்குனி உத்திர நாளில் மணந்ததாக ஐதீகம் உள்ளது. பக்தனின் எமபயம் ஒழித்து முக்தி அளித்து ம்ருத்யுஞ்ஜய மூர்த்தியாக சிவபெருமான் அருள்பாலிக்கும் நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பு மிகுந்தது. இந்தாண்டு பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், நேற்று இரவு உடையவர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.