/
கோயில்கள் செய்திகள் / வியாழன் வழிபாடு; வெள்ளிக்கவசத்தில் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பு
வியாழன் வழிபாடு; வெள்ளிக்கவசத்தில் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பு
ADDED :533 days ago
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இன்று வியாழன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குரு ஸ்தலமான இங்கு தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள ஆலமரத்தையும் சேர்த்து 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே. இங்கு இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சந்தனக்காப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவர் தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.