காளஹஸ்தி சிவன் கோயிலில் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :580 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தினந்தோறும் ஒவ்வொரு சன்னதிகளிலும் சிறப்பு உற்சவங்கள் நடப்பது வழக்கம். இந் நிலையில் நேற்று வியாழக்கிழமை என்பதால் கோயிலின் நுழைவாயிலின் எதிரில் அமைந்துள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளை கோயில் பிரதான அர்ச்சகர் கருணா குருக்கள் சிறப்பு பூஜைகளை செய்ததோடு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது (பன்னீர் இளநீர் விபூதி சந்தனம் குங்குமம் பஞ்சாமிர்தம்) அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்தனர். இதில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு மற்றும் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.