உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா; அம்மனுக்கு லட்சார்ச்சனை

காட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா; அம்மனுக்கு லட்சார்ச்சனை

கோவை; காட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 5ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து பூச்சாட்டு மற்றும் அக்னி கம்பம் நடும் விழா, அக்னி சட்டி திருவீதி உலா, மாவிளக்கு ஆகியன நடந்தன. இதில் இன்று (22ம்தேதி) பங்குனி 9ம் தேதி வெள்ளிக்கிழமை மூலவருக்கு காலை 7 மணிக்கு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !