உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 6வது ஆராதனை மஹோத்ஸவம்

காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 6வது ஆராதனை மஹோத்ஸவம்

காஞ்சி; ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆறாவது ஆராதனை மஹோத்ஸவம் இன்று காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் நடைபெற்றது.ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது ஆச்சாரியார் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆறாவது ஆராதனை மஹோத்ஸவம், காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் உள்ள புனித பிருந்தாவனத்தில் இன்று 22ம் தேதி நடைபெற்றது. மூன்று நாள் ஆராதனை விழா மார்ச் 20, 2024 புதன்கிழமை தொடங்கியது. இந்த நாட்களில் முன்னணி கலைஞர்களின் வேதபாராயணம், சமய சொற்பொழிவுகள், பஜனைகள் மற்றும் சங்கீதாஞ்சலி ஆகியவை நடைபெற்றது. விழாவில் இன்று வெள்ளிக்கிழமை, ஆராதனா தினத்தை முன்னிட்டு, காலை 7.00 மணி முதல் மனிதகுலத்தின் நலனுக்காக ஏகாதச ருத்ர ஜபமும் விஷேஷ ஹோமங்களும் நடத்தப்பட்டது. காலை 9.00 மணிக்கு பச்சரத்ன கிருதிகளை நாத சமர்ப்பணமாக குழுப் பாடுதல் நடந்தது. தொடர்ந்து பிருந்தாவனத்தில் வசோதாரா, பூர்ணாஹுதி, மகா அபிஷேகம் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது. குரு ஆராதனையின் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !