உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழி சியாமளாதேவி அம்மன் கோயில் பங்குனி உற்சவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

சீர்காழி சியாமளாதேவி அம்மன் கோயில் பங்குனி உற்சவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

மயிலாடுதுறை; சீர்காழி சியாமளாதேவி அம்மன் கோயில் பங்குனி உற்சவ விழாவில் பால்குடங்கள், காவடிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாளன் கீழ மடவிளாகத்தில் சியாமளாதேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு பங்குனி மாத உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால்குடங்கள், காவடிகள் அலகு காவடிகள், எடுத்து xதிரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் முதலான நறுமண திரவிய பொருட்களைக் கொண்டு  சிறப்பு அபிஷேகம், ஆராதனை தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாலை பச்சைக்காளி பவளக்காளி வீதி உலா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !