உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஹோலி கொண்டாட்டம்; பூக்கள் தூவி பக்தர்கள் பரவசம்

உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஹோலி கொண்டாட்டம்; பூக்கள் தூவி பக்தர்கள் பரவசம்

மத்திய பிரதேசம்; உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் ஹோலி கொண்டாடப்பட்டது.

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரர் என்னும் சிவன் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி அம்சத்துடன் இருக்கிறார். இவரை வழிபட்டால் எதிர்கால வாழ்வு உயரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் புனித நீராடல் வைபவம் நடக்கும். உஜ்ஜயினி மகாகாளேஸ்வரரை ஒருமுறை தரிசித்தாலே மோட்சம் கிடைக்கும். மாணவர்கள் இவரை தரிசிக்க கல்வி வளர்ச்சி ஏற்படும். இங்கு வழிபட்டதன் பயனாக ‘மகாகவி’ என்னும் பட்டத்தை காளிதாசர் பெற்றார். புராணங்களில் இத்தலம் ‘அவந்தி’ என அழைக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் இன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக அதிகாலையில் பஸ்ம ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து, பூக்கள் தூவி பக்தர்கள் பரவசத்துடன் ஹோலி கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !