உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

தூத்துக்குடி; கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 5:00 மணிக்கு கோயில் நடை திறந்து திருவனந்தல் பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து சண்டிகேஸ்வரர் சட்ட ரதத்திலும் விநாயகர் பெருமான் கோ ரதத்திலும், தொடர்ந்து தேரில் கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரைஇழுத்தனர். 10ம் திருவிழாவான இன்று தீர்த்தவாரியும் தபசு காட்சியும் நாளை 25ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !