பண்ணாரி குண்டம் விழா; தீ மிதித்த தமிழக அரசின் உள்துறை செயலர் அமுதா
ADDED :574 days ago
சத்தியமங்கலம்; பண்ணாரி மாரியம்மன் கோவிலில், கோலாகலமாக நடந்த குண்டம் விழாவில், லட்சக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர். தமிழக அரசின் உள்துறை செயலர் அமுதாவும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பாதுகாப்பு பணியில் ஈரோடு எஸ்.பி., ஜவஹர் தலைமையில் போலீசார், போக்குவரத்து போலீசார், ஊர்காவல் படையினர் என, 1,400 பேர் ஈடுபட்டனர். விழாவில் கோவில் செயல் அலுவலர் மேனகா மற்றும் பரம்பரை அறங்காவலர், வருவாய் துறையினர், மருத்துவ துறையினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 250க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு, சட்டசபையில் அறிவித்த படி பிரசாதம் வழங்கப்பட வேண்டும். இதன்படி கோவில் பணியாளர்கள், கடமைக்கு லட்டு வழங்கினர்.