குளபதம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை அருகே குளபதம் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் பழமை வாய்ந்ததாகும். புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த மார்ச் 26 அன்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, கடய் புறப்பாடு உள்ளிட்ட முதல் காலை யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலயாக சாலை பூஜைக்கு பிறகு பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நடந்தது காலை 10:30 மணிக்கு சுப்பிரமணியசாமி கோயில் விமான கோபுர கலசத்தில் விக்னேஸ்வர குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். விநாயகர் மற்றும் சுப்பிரமணியசாமிக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குளபதம் கிராம பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.