உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சென்னை; ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பரிவார தெய்வங்களுடன் ஐயப்ப சுவாமி அருள்பாலித்து வருகிறார். இங்கு புதிதாக விநாயகர், நவக்கிரக தெய்வங்கள், ஆஞ்சநேயர் சன்னதிகளுக்கு புதுகோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், இக்கோயிலின் 4வது கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து, இன்று 27ம் தேதி, காலை விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமியே சரணம் ஐயப்பா என கோஷமிட்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !