வடமதுரை சர்வ சக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :655 days ago
வடமதுரை; வடமதுரை திருச்சி ரோட்டில் மங்கம்மாள் கேணி அருகில் நுாறாண்டு கடந்த பழமை வாய்ந்த சர்வ சக்தி விநாயகர் கோயில் உள்ளது. தகர மேற்கூரையுடன் திறந்தவெளியாக இருந்த இக்கோயிலில் ஊர்மக்கள் சார்பில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த நிலையில், நட்சத்திர அடிப்படையில் இன்று வருடாபிஷேகம் நடந்தது. விக்னேஷ்வர, கணபதி , மகாலட்சுமி பூஜைகள், திருமஞ்சனம் உள்ளிட்ட வழிபாடுகளை பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.