மார்கழி சுவாதி; தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :112 days ago
திருப்பூர்: மார்கழி மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மூலவர் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.