உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  இடிகரை வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

 இடிகரை வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

 பெ.நா.பாளையம்: இடிகரை மணியகாரம்பாளையம் அருகே உள்ள வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.


இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் மவுண்டன் வியூ குடியிருப்பு வளாகத்தில், வெற்றி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் கும்பாபிஷேக விழா, திருப்பள்ளி எழுச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், வேத பாராயணம், முதல் கால பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மூலமூர்த்திகளை ஆதார பீடத்தில் வைத்தல், ஐம்பொன், நவமணி இடுதல், எண் வகை மருந்து சாத்துதல், இரண்டாம் கால யாக பூஜை, திருமுறை இசைத்தல், திருவடி விண்ணப்பம், திருக்குட நன்னீராட்டு பெருவிழா, அபிஷேகம், அலங்கார பூஜை ஆகியவை நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !