திருவண்ணாமலைக்கு பாதை யாத்திரை சென்ற சிவனடியார்களுக்கு செஞ்சியில் வரவேற்பு
செஞ்சி: செஞ்சி வழியாக திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பாதையாத்திரை சென்ற சிவனடியார்களுக்கு இந்து அமைப்புகள் சார்பில் வரவேற்பளித்தனர்.
திண்டிவனம்- திருவண்ணாமலை பாதயாத்திரை சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் 20வது ஆண்டாக இன்று அதி காலை 4 மணிக்கு திண்டிவனம் மரகதாம்பிகை திந்திரிணீஸ்வரர் கோவிலில் இருந்து 250 க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலைக்கு நடை பயணம் துவக்கினர். பகல் 12 மணியளவில் செஞ்சிக்கு வந்த நடைபயண குழு நிர்வாகிகள் துரை, மூர்த்தி, பாலாஜி, மணி, கார்த்திக் ஆகியோருக்கு பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில், விவேகானந்தர் பேரவை தலைவர் சிவசுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுராஜன், ஆர்.எஸ் எஸ்., நாராயணமூர்த்தி மற்றும் நாகராஜ், வாசு, கணபதி, கஜேந்திரன் உள்ளிட்ட இந்து அமைப்பினர் சால்வை அணிவித்து சிவனடியார்களை வரவேற்றனர். சிறப்பு வழிபாடு நடத்தி சிவனடியார்களுக்கு மதிய உணவு வழங்கினர். நாளை திருவண்ணாமலை சென்றடையும் சிவனடியார்கள் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.