உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா

ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா

இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


இளையான்குடியில் ஞானாம்பிகை சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இளையான்குடி எம்பிரான் மாறநாயனார் திருகூட்டம் சார்பில் சித்திரை மாத திருவாசக முற்றோதல் வழிபாடு நிகழ்ச்சி காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது முன்னதாக சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன.விழாவில் இளையான்குடி பரமக்குடி மானாமதுரை சாலைக்கிராமம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானமும் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை இளையான்குடி மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !